ஐபிஎல் தொடரின் இன்றைய KKR vs SRH போட்டியில், முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி, அதிரடியாக விளையாடி 228 ரன்கள் குவிப்பு.
கொல்கத்தா டாஸ்:
16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணியில், தொடக்கமே அதிரடியாக அமைந்தது. அணி 4 ஓவர்களில் 46 ரன்கள் எடுத்திருந்த போது, மயங்க் அகர்வால்(9 ரன்கள்) ரசல் பவுலிங்கில் ஆட்டமிழக்க, அதன்பின் இறங்கிய திரிபாதியும்(9 ரன்கள்) சிறிது நேரத்தில் ரசலிடம் விக்கெட்டை இழந்தார்.
unknown nodeஹாரி ப்ரூக் அதிரடி 50:
மறுபுறம் ஓப்பனிங் வீரராக களமிறங்கிய ஹாரி ப்ரூக், தனது அதிரடி பேட்டிங்கை காண்பிக்க, அவருக்கு உறுதுணையாக கேப்டன் மார்க்ரமும் அதிரடியாக சிக்ஸர்களை விளாசினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி ஹாரி ப்ரூக், ஐபிஎல் தொடரில் தனது முதல் அரைசதம் கடந்தார்.
கேப்டன் அதிரடி:
இதனையடுத்து கேப்டன் மார்க்ரமும் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 50ரன்கள் அடித்து இந்த ஐபிஎல் தொடரில் முதல் அரைசதத்தை பதிவு செய்தார். அடுத்த பந்திலேயே கேப்டன் மார்க்ரம், வருண் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஹாரி ப்ரூக், பெர்குசன் வீசிய ஒரு ஓவரில் சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் என பறக்கவிட்டார்.
ஹாரி ப்ரூக் அதிரடி சதம்:
அபிஷேக் சர்மா(32 ரன்கள்) மறுபுறம் கொல்கத்தா வீரர்களின் பந்துவீச்சை சிதறடித்து அதிரடி காட்டினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி ப்ரூக்(100* ரன்கள்) 55 பந்துகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். முடிவில் ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணி தரப்பில், ரசல் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
unknown node