ஐபிஎல் தொடரின் இன்றைய RCB vs LSG போட்டியில் ஸ்டோனிஸ் மற்றும் பூரான் அதிரடியால் லக்னோ அணி த்ரில் வெற்றி.
16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணியில் கோலி(61 ரன்கள்), டுபிளெஸ்ஸி(79* ரன்கள்) மற்றும் மேக்ஸ்வெல்(59 ரன்கள்) ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது.
213 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியில், முன்வரிசை வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இருந்தாலும் அதன்பின் இறங்கிய ஸ்டோனிஸ் அதிரடியாக விளையாடி எதிரணி பவுலர்களை கலங்கடித்தார்.
unknown nodeஅதிரடியாக விளையாடிய ஸ்டோனிஸ் 65 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்ததாக களமிறங்கி பூரான், நடப்பு ஐபிஎல் தொடரின் அதிவேக அரைசதம் மற்றும் ஐபிஎல் தொடரின் 2-வது அதிவேக அரைசதமடித்து அதிரடி காட்டினார். பூரான் 19 பந்துகளில் 4 போர்கள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடித்து 62 ரன்கள் எடுத்திருந்த போது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இறுதியில் லக்னோ அணி, கடைசி ஓவர் வரை த்ரில்லாக சென்ற போட்டியில், 9 விக்கெட்களை இழந்து, 213 ரன்கள் இலக்கை போராடி எட்டி, தனது 3-வது வெற்றியைப் பதிவு செய்தது. பெங்களூரு அணி சார்பில் சிராஜ் மற்றும் பர்னெல் தலா 3 விக்கெட்களையும், ஹர்ஷல் பட்டேல் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.