ஐபிஎல் 2023 தொடரில் லக்னோவில் இன்று நடைபெறும் மூன்றாவது போட்டியில் லக்னோ மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன.
குஜராத் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் 16-வது ஐபிஎல் தொடர் நேற்று பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
இன்று சனிக்கிழமை இரண்டு போட்டிகள் நடைபெறும் நிலையில், லக்னோவில் நடைபெறும் ஐபிஎல் 2023 இன் மூன்றாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 7:30 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் லக்னோ அணி, கே.எல். ராகுல் தலைமையில் விளையாட உள்ளது. லக்னோ அணியில் கே.எல். ராகுல், கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோனிஸ், டேனியல் சாம்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜெய்தேவ் உனட்கட், அவேஷ் கான், ரவி பிஷ்னோய், ஆகியோர் அணிக்கு வலு சேர்க்கின்றனர்.
ரிஷப் பண்ட் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், டேவிட் வார்னர் தலைமையில் டெல்லி அணி களமிறங்குகிறது. டெல்லி அணியில் டேவிட் வார்னர், பிலிப் சால்ட், பிருத்வி ஷா, ரோவ்மன் பவல், மிட்செல் மார்ஷ், அக்சர் படேல், குல்தீப் யாதவ், சேத்தன் சகாரியா என பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும், இரு அணிகளும் சம பலத்துடன் களமிறங்குவதால் இன்றைய போட்டியில் அதிரடிக்கு பஞ்சமிருக்காது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் மோதுகின்ற இந்த போட்டி லக்னோவில் பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகனா கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஏகனா கிரிக்கெட் மைதானத்தில் உள்ள ஆடுகளம் போட்டித்தன்மை வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி கேபிடல்ஸ் (உத்தேச அணி) :
டேவிட் வார்னர் (C), பிருத்வி ஷா, மிட்செல் மார்ஷ், மனிஷ் பாண்டே/ரிலீ ரோசோவ், சர்ஃபராஸ் கான் (W), ரோவ்மன் பவல், அக்சர் படேல், சேத்தன் சகாரியா, கலீல் அகமது, முகேஷ் குமார் மற்றும் குல்தீப் யாதவ்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (உத்தேச அணி) :
கே எல் ராகுல் (C&W), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, ஆயுஷ் படோனி, ரவி பிஷ்னோய், மார்க் வூட், அவேஷ் கான் மற்றும் ஜெய்தேவ் உனத்கட்.