IPL2023 : தொடர் வெற்றியை பெறுமா ராஜஸ்தான்..? இன்று லக்னோ அணியுடன் மோதல்..!

ஐபிஎல் 2023 தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் 2023 தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன.

16-வது சீசன் ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெறும் 26 வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த சீசன் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி இன்றைய போட்டியிலும் வெற்றி பெறுமா.? என்ற கேள்வி ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

கேஎல்ராகுல் தலைமையில் விளையாடுகின்ற லக்னோ அணி, இதுவரை நடந்த 5 போட்டிகளில் 3 போட்டிகளில் வென்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடைசியாக பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடிய லக்னோ லக்னோ அணி, இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ள இந்த இரு அணிகளும் தங்களது இடத்தை தக்க வைத்துக் கொள்ள போராடும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த போட்டியானது இன்னும் சிலமணி நேரத்தில் தொடங்கவுள்ளதால் எந்த அணி வெல்லப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

ராஜஸ்தான் vs லக்னோ : போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச வீரர்களின் பட்டியல்.

ராஜஸ்தான் ராயல்ஸ் :

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(w/c), ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், ஆடம் ஜம்பா, சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் :

கேஎல் ராகுல் (C), கைல் மேயர்ஸ்/குயின்டன் டி காக், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன்(W), ஆயுஷ் படோனி, அவேஷ் கான், யுத்வீர் சிங் சரக், மார்க் வூட், ரவி பிஷ்னோய்