டி20 அணியை அறிவித்த இர்பான் பதான் ..! கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !
Irfan Pathan : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கு தகுதியான 15 இந்திய வீரர்களை இர்பான் பதான் தேர்ந்தெடுத்ள்ளார்.
ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு டி20 உலகக்கோப்பை தொடங்கவிருக்கும் நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ), ஐபிஎல்லில் சிறப்பாக செயல் படும் வீரர்களை மட்டும் இந்திய டி20 அணியில் இடம்பெற செய்வோம் என்று தெரிவித்ததற்கு பின் ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கிரிக்கெட் லெஜெண்ட்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என பலரும் தங்களுக்கு பிடித்த, அவர்களின் தரப்பில், ஐபிஎல் போட்டிகளின் போது வர்ணனைகளிலும், இன்னும் ஒரு சில இடங்களிலும் இந்திய அணியை அறிவித்து வருகின்றனர். அதே போல இர்பான் பதான் இது வரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளை ஒப்பிட்டு பார்த்து அவருக்கு பிடித்தமான அணியை தேர்ந்தெடுத்துள்ளார்.
அவர் அறிவித்த இந்த அணியானது சமூகத்தளத்தில் வைரலாகி பரவி வருகிறது. மேலும், இந்த ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடி வரும் ஒரு சிலர் அந்த அணியில் இல்லை என ரசிகர்கள் ஒரு சிலர் அவரை கேள்வி எழுப்பியும் வருகின்றனர். அவர் தேர்ந்தெடுத்த அணியின் விவரத்தையும், அணியில் இடம்பெறாத வீரர்களையும் தற்போது பார்க்கலாம்.
அவர் தேர்ந்தெடுத்த அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குலதீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷதீப் சிங், ஸுப்மேன் கில் ஆகிய வீரர்களை அவர் அறிவித்துள்ளார்.
இதில் என்னவென்றால் இந்த ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடி வரும் சஞ்சு சாம்சன், கே.எல்.ராகுல் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் வீரர்கள் இடம் பெறாததால் ரசிகர்கள் அவரிடம் கேள்விகள் எழுப்பி வருகின்றனர். இதில் ருதுராஜ் ஐபிஎல் தொடரில் தொடக்கத்தில் சற்று சறுக்கலையே சந்தித்தார்.
ஆனால் கடந்த 3 போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடி 1 சதமும் அடித்துள்ளார். அதனால் அவரையும் வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா அணியில் இடம்பெற வைக்க வேண்டும் என்று ரசிகர்கள் இர்பான் பதானையும் தாண்டி பிசிசிஐயிடமே பரிந்துரை செய்து வருகின்றனர். ஆனால், பிசிசிஐஇடம் இருந்து அதிகாரப்பூர்வ அணி வரும் வரை நாம் காத்திருந்தே ஆக வேண்டும்.