இது நம்ம தல தோனியா?? இப்படி ஆயிட்டாரு.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

A photo of former Indian cricket team captain Dhoni, who now looks like a monk, has gone viral on the internet.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தற்பொழுது துறவி போல இருக்கும் புகைப்படம் ஒன்று, இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தல தோனி, கடந்தாண்டு ஜூலை மாதம் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தற்பொழுது ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அவர், சென்னையில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதுதொடர்பான புகைப்படம் வெளியாகி, ரசிகர்களை குஷியாக்கியது.

இந்நிலையில் தல தோனி, மொட்டை அடித்து, துறவிகளை போல ஆடை அணிந்த புகைப்படம், இணையத்தில் தற்பொழுது அதிவேகமாக வைரலாகி வருகிறது. தல தோனி, புதிதாக பல ஸ்டைல்களை முயற்சிப்பார். அதுதொடர்பான புகைப்படங்களையும் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு வருவதும் வழக்கம்.

அந்தவகையில் இந்த புகைப்படத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ், தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இது நம்ம தல தோனியா? எனவும், தல துறவியாக மாறிவிட்டாரா? என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

unknown node