இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த், ஜனவரி 5 ஆம் தேதியை தனது மறுபிறப்பு என இன்ஸ்டாவில் மாற்றியுள்ளார்.
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் வீரரான ரிஷப் பந்த், கடந்த வருடம் டிசம்பர் 30 ஆம் தேதியில் பயங்கர விபத்தில் சிக்கினார். அவரது கார் விபத்தில் தீப்பற்றி எரிந்தது, இந்த விபத்தில் ரிஷப் பந்த் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார் என்றே சொல்லலாம். இதன்பின் ரிஷப் பந்த், மும்பையின் கோகிலாபென் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை செய்யப்பட்டது.
unknown nodeRishab pant dob [Image- Screenshot Insta/@rishabpant]
unknown nodePant 2 [Image-TwitterScreenshot/@RishabhPant17]
தற்போது ரிஷப் பந்த், தான் சிகிச்சை முடிந்து வெளிவந்த தேதியான ஜனவரி 5 ஆம் தேதியை தனது மறுபிறப்பு என சமூக வலைதளமான இன்ஸ்டா மற்றும் ட்விட்டரில் பயோவாக(Bio) மாற்றம் செய்துள்ளார். விபத்துக்குப்பின் தற்போது பந்த் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறார், விரைவில் இந்திய அணிக்கு திரும்ப அவர் தீவிர பயிற்சி செய்து வருகிறார்.
