கோலி வலிமையாக போறாரு! இந்தியாவுக்கு கோப்பை வரப்போகுது- பிரையன் லாரா!

brian lara about india

விராட் கோலி : 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பேட்டிங் பார்ம் அதிரடியாக இல்லை என்ற விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கும் சூழலில், அவருக்கு ஆதரவாக பல கிரிக்கெட் வீரர்களும் பேசி வருகிறார்கள். அந்த வகையில், மேற்கீந்திய தீவுகள் வீரர் பிரையன் லாரா தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய  பிரையன் லாரா ” ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி அதிரடியாக விளையாட முயற்சி செய்தார். 24 பந்துகளில் 24 ரன்கள் எடுத்திருந்தார். அது பெரிய விஷயம் இல்லை என்று நீங்கள் கூறலாம். ஆனால், அந்த நேரத்தில் அவருக்கும் அணிக்கும் அது முக்கியமான விஷயம் என்று நான் சொல்வேன். தொடர்ச்சியாக இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றியை பதிவு செய்து வருகிறது. இந்த கோப்பையை வெல்வதற்கு இந்தியா இன்னும் ஒரு படி நெருங்கிவிட்டது என்று நினைக்கிறேன்.

virat
virat [File Image]
விராட் கோலி ஏற்கனவே மிகவும் வலிமையாக இருக்கிறார். அந்த வலிமையில் இருந்து வரும் போட்டிகளில் கூடுதல் வலிமைக்கு செல்லப்போகிறார் . அடுத்ததாக விராட் கோலி பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட இருக்கிறார். அந்த போட்டியில் நிச்சியம் அதிரடியாக விளையாடுவார் என நான் நினைக்கிறன். இந்த உலகக் கோப்பையில் இன்னும் நிறைய ஆட்டங்கள் இருக்கிறது.

எனவே, ஒரு சில ஆட்டங்களை வைத்து விராட் கோலியை விமர்சிக்க கூடாது. அவர் வரும் போட்டிகளில் நன்றாக விளையாடுவார். நாம் அவரை பாராட்டி அவருக்கு புத்துணர்ச்சி கொடுக்கவேண்டும்.அப்போது தான் அவருக்கு மேலும் உற்சாகம் கிடைத்து நன்றாக விளையாடுவார். நாங்கள் அவரைப் பழையபடி அதிரடி ஆட்டக்காரராக பார்க்கப் போகிறோம்” எனவும் பிரையன் லாரா கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்