தொட்டா தீப்பொறிதாண்டா...சதம் விளாசி சாதனைகளை படைத்த கிங் கோலி!

டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் விளாசிய இந்திய வீரர் என்ற அசத்தல் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

Hero Image

ராய்ப்பூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) வீரர் விராட் கோலி T20 கிரிக்கெட்டில் 14,000 ரன்கள் எனும் மைல் கல்லைத் தொட்டு சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் அவர் இந்திய வீரர்களில் இந்தச் சாதனையை எட்டிய முதல் வீரராக உருவெடுத்துள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 193 ரன்கள் இலக்கைத் துரத்தியபோது, கோலி 60 பந்துகளில் 105 ரன்கள் (அவுட் ஆகாமல்) அடித்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார். இந்த இன்னிங்ஸின்போதுதான் அவர் 14,000 ரன்கள் மைல் கல்லைத் தொட்டார். இந்தச் சாதனையை 409 இன்னிங்ஸ்களில் எட்டியுள்ள கோலி, கிரிஸ் கெயிலின் 423 இன்னிங்ஸ் சாதனையை முறியடித்து உலக சாதனை படைத்துள்ளார்.

இதுதவிர, இந்தப் போட்டியில் கோலி தனது 9ஆவது ஐபிஎல் சதத்தைப் பதிவு செய்தார். T20 கிரிக்கெட்டில் 10 சதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

போட்டிக்குப் பிறகு பேசிய கோலி, “அணிக்கு புள்ளிகள் முக்கியம் என்பதால் பெரிய கொண்டாட்டம் எதுவும் இல்லை. அழுத்தம் என்பது ஒரு சலுகை. நல்ல அழுத்தம் உங்களை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும். நான் நர்மஸாக இருந்தேன். முதல் ரன்னை எடுக்க வேண்டும் என மட்டுமே நினைத்தேன்.

எந்த பெரிய ஷாட்டும் அடிக்காமல், கேப்ஸை கண்டுபிடித்து, ரிஸ்க் இல்லாத கிரிக்கெட் விளையாடினேன்” என்றார். மேலும், “நான் பேட்டிங் செய்வதை மிகவும் விரும்புகிறேன். இந்த அளவில் விளையாடுவது பெரும் கௌரவம். இதுதான் என் வாழ்க்கை முழுவதும் செய்து வரும் ஒன்று. ஒவ்வொரு நாளையும் முழுமையாகப் பயன்படுத்த விரும்புகிறேன்” என்று உணர்ச்சிபூர்வமாகக் கூறினார்.