#IPL2021: அணியின் பெயர், லோகோவை மாற்றவுள்ளதா கிங்ஸ் லவன் பஞ்சாப்??

The KXIP team management has announced that it will change the name and logo of the team. The color of the jersey will change

ஐபிஎல் தொடர் நெருங்கவுள்ள நிலையில், கே.எல்.ராகுல் தலைமை தாங்கும் கிங்ஸ் லவன் அணி, தனது பெயர் மற்றும் லோகோவினை மாற்ற திட்டமிட்டு வருகிறது.

உலகளவில் கொரோனா பரவலுக்கும் மத்தியில் ரசிகர்களின்றி, 2020 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள், அமீரகத்தில் நடைபெற்றது. இதுவரை நடந்த ஐபிஎல் வரலாற்றில் 2020 ஆம் நடந்த ஐபிஎல் போட்டிகள் போல எந்த போட்டியும் இருந்ததில்லை. தற்பொழுது 2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான பணிகளை ஐபிஎல் நிர்வாகம் தொடங்கியுள்ளது.

அந்தவகையில், இந்தியா – இங்கிலாந்து இடையிலான இரண்டாம் டெஸ்ட் போட்டி முடிவடைந்த பின் மினி ஏலம் தொடரும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்காக ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ளவுள்ள அணிகள், தங்களை தயார்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சீசன், முதல் போட்டியில் இருந்தே பஞ்சாப் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தது. அந்த அணியை கே.எல்.ராகுல் நன்றாக வழி நடத்தினாலும், அந்த அணிக்கு அதிர்ஷ்டக் காற்று வீசவில்லை.

இந்தநிலையில், கிங்ஸ் லவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி சின்கா எடுத்த முடிவால், அணியின் பெயர் மற்றும் லோகோவை மாற்றவுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, வீரர்கள் அணியும் ஜெர்சி நிறமும் மாறவுள்ளதாக கூறப்படுகிறது.