#KKR v SRH: டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பேட்டிங் தேர்வு!

Hyderabad won the toss and elected to bat first in the 49th league match against Kolkata Knight Riders.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான 49வது லீக் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் இன்றைய தினத்தின் இரண்டாவது ஆட்டமான 49வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணிகளும் மோதுகின்றன. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தடுமாறி வருகிறது. புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் இறுதி இடத்தில் இருக்கும் இவ்வணி ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. எனவே, 10 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ள கொல்கத்தாவுக்கு இப்போட்டி முக்கியமானது இருக்கும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:

ஷுப்மான் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, இயோன் மோர்கன் (கேப்டன்), ஷாகிப் அல் ஹசன், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், சிவம் மாவி, டிம் சவுதி, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

ஜேசன் ராய், விருத்திமான் சாஹா (w), கேன் வில்லியம்சன் (c), ப்ரியம் கார்க், அபிஷேக் சர்மா, அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், சித்தார்த் கவுல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.