KKR vs RR: டாஸ் வென்றது ராஜஸ்தான் அணி… KKR முதலில் பேட்டிங்.!

ஐபிஎல் தொடரின் இன்றைய KKR vs RR போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பவுலிங் தேர்வு.
ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும் கிட்டத்தட்ட சம வலிமையுடன் 10 புள்ளிகளைப் பெற்றுள்ளன.
புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் அணி 10 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், கொல்கத்தா அணியும் 10 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும், இருக்கிறது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் பிளேஆப் சுற்றுக்கு செல்ல ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.
இதனால் இன்றைய போட்டியில் வெல்ல இரு அணிகளுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவும் என்பதில் சந்தேகமில்லை. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ராஜஸ்தான் அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்(W/C), ஜோ ரூட், துருவ் ஜூரல், ஷிம்ரன் ஹெட்மயர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், சந்தீப் சர்மா, கேஎம் ஆசிப், யுஸ்வேந்திர சாஹல்
கொல்கத்தா அணி: ரஹ்மானுல்லா குர்பாஸ்(W), ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா(C), ஆண்ட்ரே ரசல், ரிங்கு சிங், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், அனுகுல் ராய், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி