கோலி, ரோஹித் மேலும் 2 பேரை வைத்துக்கொண்டு உலகக்கோப்பை வெல்ல முடியாது- கபில்தேவ்

இந்திய அணி, உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமானால் சில கடின முடிவுகளை எடுக்கவேண்டும் என கபில்தேவ் கூறியுள்ளார்.

இந்திய அணி, உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமானால் சில கடின முடிவுகளை எடுக்கவேண்டும் என கபில்தேவ் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் அப்போது தான் ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியும் என முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார். இந்த ஆண்டு உலகக்கோப்பையை இந்தியா வெல்ல வேண்டுமானால், கடின முடிவுகளை எடுக்கவேண்டும்.

விராட் கோலி, ரோஹித் சர்மா, மேலும் 2-3 வீரர்களை வைத்துக்கொண்டு உங்களால் உலகக்கோப்பையை வெல்லமுடியாது, அது ஒருபோதும் நடக்காது. இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும், என்று கபில்தேவ் மேலும் கூறினார்.