ஐசிசி ஒருநாள் தரவரிசையில் கோலி, ரோஹித் முன்னேற்றம்.!

ஐசிசி ஒருநாள் போட்டியில் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

ஐசிசி ஒருநாள் போட்டியில் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

இந்தியா- இலங்கை முதல் ஒருநாள் போட்டிக்கு பிறகு வெளியான ஐசிசி ஒருநாள் போட்டிக்கான வீரர்களின் தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதமடித்த கோலி, இரு இடங்கள் முன்னேறி 6-வது இடத்தில் இருக்கிறார்.

இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, 83 ரன்கள் அடித்ததன்மூலம் ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்திலும், 2 விக்கெட்கள் எடுத்த மொஹம்மது சிராஜ், 4 இடங்கள் முன்னேறி 18-வது இடத்திற்கும் உயர்ந்துள்ளனர். இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா, இந்த போட்டியில் சதமடித்து அணியின் வெற்றிக்கு போராடினார்.

ஆனாலும் இலங்கை அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது, 20 இடங்கள் உயர்ந்து 61-வது இடத்திற்கு ஷனகா முன்னேற்றம் கண்டுள்ளார். ஒருநாள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் பாபர் அசாம், தொடர்ந்து முதலிடத்திலும், பந்துவீச்சாளர்களில் ட்ரெண்ட் போல்ட் முதலிடத்திலும் இருக்கின்றனர்.