அதிர்ச்சி செய்தி: 21 வயது இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்! கிரிக்கெட் ரசிகர்கள் கவலை!

கொல்கத்தாவில் வெஸ்ட் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் டிவிசந்-1 லீக் போட்டியில் 21 வயதான அனிகெட் என்ற இளம் சுழற்பந்து வீச்சாளர் ஆடிவந்தார். நாளைய

கொல்கத்தாவில் வெஸ்ட் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் டிவிசந்-1 லீக் போட்டியில் 21 வயதான அனிகெட் என்ற இளம் சுழற்பந்து வீச்சாளர் ஆடிவந்தார். நாளைய போட்டிக்காக சக வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். பயிற்சிக்காக கால்பந்து விளையாடி அனைவரும் உடல் தகுதியை மேம்படுத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென மைதானத்தில் சுருண்டு அனிகெட் விழுந்த எழுந்திருக்கவேயில்லை. உடனடியாக மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர் அங்கு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என மருத்துவர்கள் அறிவித்தனர் இதனால். இந்தியாவின் கிரிக்கெட் வீரர் ஒருவர் திடீர் மரணம் அடைந்ததால் கிரிக்கெட் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.