Ind vs Aus WTC Final Day 5 Live: இந்தியாவை வீழ்த்தி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா..!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இன்று ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று இந்திய அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 3

IND vs AUS Day5

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இன்று ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று இந்திய அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து, இன்று ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடங்கியது. கோலி மற்றும் ரஹானே ஆட்டமிழக்க, அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் பெரிதாக சோபிக்காமல் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்றது.