கத்துகிட்ட வித்தைய ஆஸ்திரேலிய வீரருக்கு கத்துக்கொடுத்த மலிங்கா

இந்த ஆண்டுக்கான 50 ஓவர்  உலக கோப்பைக்கான  போட்டி இங்கிலாந்தில் நடைபெறுகிறது.

இந்த ஆண்டுக்கான 50 ஓவர்  உலக கோப்பைக்கான  போட்டி இங்கிலாந்தில் நடைபெறுகிறது.

கிரிக்கெட்டை பொருத்தவரை உரசல்கள் அதிகம் இருந்தாலும்,அதேவேளையில் வீரர்களுக்குள் ஒருவருக்கொருவர் நட்புடன் பழகுவது அதிகமாக இருக்கும்.அது சக நாட்டு வீரராக இருந்தாலும் சரி,வெளிநாட்டு வீரராக இருந்தாலும் சரிசமமாக பழகி வருகின்றனர்.அதிலும் தங்களுக்குள் இருக்கும் தனிப்பட்ட திறமைகளை பிற வீரர்களுக்கு கற்று கொடுப்பதில் தயக்கம்காட்டுவதில்லை.

இதற்கு ஏற்றவாறு நேற்று முன்தினம் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே போட்டிக்கு பின் ஒரு சிறப்பான சம்பவம் ஓன்று அரங்கேறியுள்ளது.   ஆனால் இந்தப் பயிற்சி  போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் மலிங்கா விளையாடவில்லை.

unknown node

இந்தப் போட்டி முடிந்த பின்னர் மலிங்கா ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் ஸ்டோனிஸ்க்கு தனது பந்துவீச்சு குறித்த சில குறிப்புகள் வழங்கினார்.இது தொடர்பாக மலிங்கா கூறுகையில் பந்துவீச்சு தொடர்பான ஆலோசனையை அவருக்கு வழங்கியதாக கூறினார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.