திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி.!

Cricketer Manoj Tiwari joined the Trinamool Congress today in the presence of Mamata Banerjee.

கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில், மம்தா பாணர்ஜி முன்னிலையில் இன்று அக்கட்சியில் இணைந்தார்.

மேற்கு வங்கம் முதல்வர் மம்தா பாணர்ஜி முன்னிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். வரும் சட்டமன்ற தேர்தலில் மனோஜ்திவாரி களமிறங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.சமீப காலமாக மனோஜ் திவாரி இந்திய அணியிலும், ஐபிஎல் தொடரிலும் இடம்பிடிக்க முடியாமல் இருந்து வரும் நிலையில், தனது போக்கை அரசியல் பக்கம் திருப்பி வருகிறார்.

மத்திய அரசின் நடவடிக்கைகள் எதிர்த்தும், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பாப் பாடகி ரியானா கருத்து தெரிவித்தபோது, மற்ற பிரபலங்கள் அரசுக்கு ஆதரவாக தங்கள் கருத்தை தெரிவித்து வந்த சூழலில், அதற்கு எதிர்க்கருத்து தெரிவித்த ஒரு சில பிரபலங்களில் மனோஜ் திவாரியும் ஒருவர். இதுபோன்று, தற்போது பேசப்படும் பெட்ரோல், டீசல்விலை உயர்வை கண்டித்து உரக்க குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.