#BREAKING: உயரம் தாண்டுதலில் மாரியப்பன் தங்கவேலு வெள்ளி வென்றார்..!

பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளி பதக்கம் வென்றார்.

பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளி பதக்கம் வென்றார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று டோக்கியோ பாராலிம்பிக் ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவிற்கு 2 பதக்கம் வென்றது.

இதில், நுழையில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்கபதக்கத்தை தவறவிட்டு வெள்ளி பதக்கம் வென்றார்.  சரத்குமார் வெண்கலம் பதக்கம் வென்றார்.  மாரியப்பன் தங்கவேலு கடந்த 2016 ரியோ பாராலிம்பிக்கிலும் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் 10 பதக்கங்களை வென்றுள்ளனர். அதில், 2 தங்கம் , 5 வெள்ளி , 3 வெண்கலம் வென்றுள்ளனர்.