சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அதன் மைதானத்திலேயே வைத்து 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி
ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச முடிவு செய்ததது. முதலில் பந்து வீசினாலும் மும்பை அணியை அற்புதமாக கட்டுக்குள் கொண்டுவந்தது. 20 ஓவர்களின் முடிவில் மும்பை அணி வெறும் 136 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதன் பின்னர் களமிறங்கிய ஹைதராபாத் அணியால் மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. குறிப்பாக மும்பை அணியின் அறிமுக வீரர் வெஸ்ட் இண்டீஸ் வீரரான அல்ஸாரி ஜோசப் எதிர்ணி வீரர்களை தனது வேகத்தால் பயமுறுத்தினார்.
அவர் மொத்தம் 3.4 ஓவர்கள் மட்டுமே வீசி 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் அந்த அணி 17.4 ஓவர்களில் 96 ரன்கள் மட்டுமே எடுத்து தனது 10 விக்கெட்டையும் இழந்தது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அதன் சொந்த மைதானத்திலேயே வைத்து 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.