ஐபிஎல் தொடரின் இன்றைய MI vs RCB போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பவுலிங் தேர்வு.
16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மும்பையின் வான்கடே ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இரு அணிகளும் 10 போட்டிகளில் விளையாடி 10 புள்ளிகளைப் பெற்றுள்ளன. இதில் RCB அணி 6-வது இடத்திலும், MI அணி 8-வது இடத்திலும் இருக்கின்றன.
இரு அணிகளும் இன்னும் பிளேஆப் வாய்ப்பை உறுதி செய்யாத நிலையில், மீதமுள்ள 4 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இனிவரும் ஒவ்வொரு போட்டியும் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே இவ்விரு அணிகளும் மோதியதில் பெங்களூரு அணி, மும்பையை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று பேட்டிங்கிற்கு சாதகமான வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இரு அணிகளிலும் பவர் ஹிட்டர் பேட்ஸ்மேன்கள் இருப்பதால் சிக்ஸர் மழையை எதிர்பார்க்கலாம்.டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
மும்பை அணி:ரோஹித் ஷர்மா(C), இஷான் கிஷன்(W), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நேஹால் வதேரா, கிறிஸ் ஜோர்டன், பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேயா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்
பெங்களூரு அணி:விராட் கோலி, ஃபாஃப் டு பிளெஸ்ஸி(C), அனுஜ் ராவத், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக்(W), வனிந்து ஹசரங்கா, ஹர்சல் படேல், விஜய்குமார் வைஷாக், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்
