காணாமல் போன கிரிக்கெட்டர் கேதர் ஜாதவின் தந்தை, பத்திரமாக மீட்பு.!

புனேவில் காணாமல் போன முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவின் தந்தை கண்டுபிடிக்கப்பட்டார்.

புனேவில் காணாமல் போன முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவின் தந்தை கண்டுபிடிக்கப்பட்டார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான கேதர் ஜாதவ், தனது தந்தை மகாதேவ் ஜாதவ், காலை நடைப்பயணத்திற்காக கோத்ருட் வீட்டை விட்டு வெளியேறியவர் அதன்பிறகு வீட்டிற்கு திரும்பவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அலங்கர் காவல்நிலையத்தில் கேதர் அளித்திருந்த புகாரில் 75 வயதான தனது தந்தை, டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தார். மகாதேவ் ஜாதவ் வீட்டில் இருந்து காணாமல் போன சிலமணிநேரங்களிலேயே கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மகாதேவ் ஜாதவ் முந்த்வா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக முந்த்வா காவல் நிலைய அதிகாரி அஜித் லக்டே தெரிவித்தார். அவரது உடல்நிலை நன்றாக உள்ளது, அவர் மீண்டும் குடும்பத்துடன் இணைந்துள்ளார் என்று அதிகாரி மேலும் கூறினார்.