டெல்லி கேபிடல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றது.
மகளிர் ஐபிஎல் தொடரின் 18-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் பெண்கள் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் பெண்கள் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் எடுத்துள்ளது.
unknown node110 ரன்கள் என்ற இலக்கில் முதலில் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் மெக் லானிங் – ஷஃபாலி வர்மா ஜோடி 56 ரன்கள் குவித்தது. ஷஃபாலி வர்மா ஆட்டமிழந்த நிலையில் ஆலிஸ் கேப்ஸி களமிறங்கினர். தங்களது அட்டகாசமான பேட்டிங்கால் ஆலிஸ் கேப்ஸி மற்றும் மெக் லானிங் இறுதிவரை நின்று அணியை வெற்றி பெற வைத்தனர்.
unknown node9 ஓவர்களில் 110 ரன்களை அடித்த டெல்லி கேபிடல்ஸ் அணி, 1 விக்கெட்டை இழந்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பெற்றது. டெல்லி கேபிடல்ஸ் அணியில் அதிகபட்சமாக ஆலிஸ் கேப்ஸி 38* ரன்களும், ஷஃபாலி வர்மா 33 ரன்களும், மெக் லானிங் 32* ரன்களும் குவித்துள்ளனர். இந்த போட்டியின் சிறந்த வீராங்கனையாக மரிசான் கேப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.