ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்! ரோஹித் சர்மா சாதனை.!

ஒருநாள் கிரிக்கெட்டில், இந்தியாவில் அதிக சிக்ஸர்களை அடித்து ரோஹித் சர்மா, வரலாறு படைத்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில், இந்தியாவில் அதிக சிக்ஸர்களை அடித்து ரோஹித் சர்மா, வரலாறு படைத்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து நியூசிலாந்து அணி, மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில் இன்று இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான ஒருநாள் தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று ஹைதராபாத்தில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் கேப்டன் ரோஹித் சர்மா, தான் அடித்த முதல் சிக்ஸர் மூலம் இந்திய மண்ணில் ஒருநாள் போட்டியில்  அதிக சிக்ஸர்கள்(124சிக்ஸர்) அடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.

35வயதான ரோஹித் சர்மா, இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட்டில் 74 இன்னிங்ஸ்களில் 124 சிக்ஸர்களை அடித்துள்ளார், இதற்கு முன் எம்.எஸ்.தோனி இந்தியாவில் 123 சிக்ஸர்களை அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது, ரோஹித் இன்று அந்த சாதனையை முறியடித்துள்ளார்.