உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் மகிந்திர சிங் தோனி நிச்சயம் இடம் பிடிப்பார் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்கரகரா தெரிவித்துள்ளார்.
50 ஓவர் உலக கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் ஒவ்வொரு கிரிக்கெட் விமர்சகரும் ஒவ்வொரு மாதிரியான விமர்சனங்களை தற்போது முன்வைத்து வருகின்றனர்.
unknown nodeஇந்த நிலையில் இந்திய அணி குறித்து இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்கரகரா தனது கருத்தையும் தெரிவித்துள்ளார்.அதில் உலகக்கோப்பை என்று வந்தால் அதில் அனுபவம் தான் முக்கியம்.இந்திய அணியில் குறிப்பாக தோனி நிச்சயம் இடம் பிடிப்பார். உலகக்கோப்பையில் மிகவும் கடினமான சூழ்நிலையான ஒரு நேரம் வரும்.அந்த நேரத்தில் அவருடைய அனுபவத்துவம் கொண்ட அமைதியான ஒருவர் அணியில் இருக்க வேண்டும் என்று விராட் கோலி நினைப்பார் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்கரகரா தெரிவித்துள்ளார் மேலும் அனைத்து ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பும் இதுவாகவே உள்ளது.