141 ஆண்டுகால சாதனையை முறியடித்த, ஆஸ்திரேலிய இளம் வீரர் மர்பி.!

ஆஸ்திரேலியாவின் இளம்வீரர் மர்பி, இந்தியாவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி 141 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் இளம்வீரர் மர்பி, இந்தியாவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி 141 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-காவஸ்கர் டெஸ்டின் முதல் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னங்சில் ஆஸ்திரேலிய அணி, 177 ரன்களுக்கு சுருண்டது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மாவின் அசத்தல் சதம், ஜடேஜா (66* ரன்கள்) மற்றும் அக்சர் படேல் (52* ரன்கள்) அரைசதம் உதவியுடன் இந்திய அணி, நேற்று இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் குவித்துள்ளது.

இதில் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமான 22 வயதான டாட் மர்பி, தனது ஸ்பின் பவுலிங் மூலம் இந்திய அணிக்கு சிக்கலை கொடுத்துள்ளார். இந்திய அணியின் 7 விக்கெட்களில், மர்பி மட்டும் 5 விக்கெட்களை எடுத்து 141 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின், 22 வயது 87 நாட்களான மர்பி, இந்த 5 முக்கிய விக்கெட்களை எடுத்து 141 ஆண்டு கால சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக 1882 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் ஜார்ஜ் பால்மர் 22 ஆண்டுகள் மற்றும் 360 நாட்கள் வயதில் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார்.