தனது கிராமத்திலேயே கிரிக்கெட் மைதானம் அமைக்கும் கிரிக்கெட் வீரர் நடராஜன்..!

கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது சொந்த கிராமமான சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைத்து வருகிறார்.

கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது சொந்த கிராமமான சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைத்து வருகிறார்.

சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் நடராஜன். இவர் முதன் முதலில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி. பின் தமிழக அளவிலான டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார்.

அதில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், இந்திய அளவிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். இந்த நிலையில், கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வந்தது.

இந்நிலையில், தற்போது அவர் தனது சொந்த கிராமமான சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைத்து வருகிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எனது கிராமம் சின்னப்பம்பட்டியில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய புதிய கிரிக்கெட் மைதானம் அமைத்து வருகிறேன் என கிரிக்கெட் வீரர் நடராஜன் ட்வீட் செய்துள்ளார். நடராஜன் கிரிக்கெட் மைதானம் என இம்மைதானத்திற்கு பெயர் சூட்டப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். சென்ற வருடம் டிசம்பர் மாதம் இந்திய அணிக்காக களமிறங்கினேன், இந்த வருடம் டிசம்பரில் கிரிக்கெட் மைதானம் அமைத்து வருகிறேன்..! கடவுளுக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார்.

unknown node