"அறுவை சிகிச்சை முடிவடைந்தது.. வலுவாகவும், ஃபிட்டாகவும் திரும்பி வருவேன்"- நடராஜன்!

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பாக தமிழக வீரர் நடராஜன் விளையாடி வருகிறார். கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் இவரின் அதிரடி ஆட்டத்தால் இவருக்கு இந்தியா

யாக்கர் மன்னன் நடராஜனுக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தனது சமூகவலைத்தள பக்கங்களில் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பாக தமிழக வீரர் நடராஜன் விளையாடி வருகிறார். கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் இவரின் அதிரடி ஆட்டத்தால் இவருக்கு இந்தியா அணியில் வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து இவர் ஆஸ்திரேலியா தொடரில் அதிரடியாக விளையாடி இந்தியா மட்டுமின்றி, உலகளவில் பலரையும் திரும்பிப்பார்க்க வைத்தார்.

மேலும், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் நடராஜன் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அவருக்கு பதிலாக அணியில் கலீல் அஹமதுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், நடராஜனுக்கு முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு இன்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அறுவை சிகிச்சை முடிவடைந்த பின் நடராஜன் தனது சமூகவலைத்தள பக்கங்களில் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டார். அந்த பதிவில் அவர், “இன்று நான் அறுவை சிகிச்சை மேற்கொண்டேன். மருத்துவக்குழு, அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி. மேலும், காயத்தில் இருந்து விரைவாக மீண்டு வர ஆறுதல் தெரிவித்த பிசிசிஐ மற்றும் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி’’ என்று கூறிய அவர், நான் முன்னைவிட வலுவாகவும், ஃபிட்டாகவும் திரும்பி வருவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

unknown node