டெஸ்ட் போட்டியில் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் அறிமுகம்..!

Natarajan and Washington Sunder, who are currently making their Test debuts for the Indian team, ruled out of the tour due to injuries

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளது. இதனைதொடர்ந்து 4 ஆம் டெஸ்ட் போட்டி, இன்று முதல் 19 ஆம் தேதி வரை பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெறுகிறது.

unknown node

இந்த சுற்றுப்பயணத்தின் போது பல வீரர்கள் காயமடைந்த நிலையில், தற்போது இந்திய அணியின் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் களமிறங்கியுள்ளனர். இந்த போட்டிக்காக நடராஜனின் நம்பர் 300, வாஷிங்டன் சுந்தர் 301 நம்பர் கொண்ட தொப்பிகளை இன்று போட்டி துவங்குவதற்கு சற்று நேரத்திற்கு முன் வழங்கபட்டது.

4-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. 48 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டை இழந்து 212 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் சர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர் மற்றும் சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை பறித்தனர்.

unknown node