அதிரடி காட்டிய நெல்லை ராயல் அணி..! 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

டிஎன்பிஎல் தொடரின் இன்றைய SMP vs NRK போட்டியில், நெல்லை ராயல் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Nellai Royal Kings won

டிஎன்பிஎல் தொடரின் இன்றைய SMP vs NRK போட்டியில், நெல்லை ராயல் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

7-வது சீசன் டிஎன்பிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் கோவையில் உள்ள எஸ்என்ஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களம் இறங்கிய மதுரை அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்தது இதனை அடுத்து 127 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணியில் களமிறங்கிய ஸ்ரீ நெரஞ்சன் மற்றும் அருண் கார்த்திக் பொறுப்பாக விளையாடி அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.

நெரஞ்சன் 15 ரன்களில் ஆட்டம் இழந்ததும், ராஜகோபால் களமிறங்கி அதிரடியாக விளையாடினார். அதன்பின் அருண் கார்த்திக் 32 ரன்களில் வெளியேற, அருண்குமார் மற்றும் சோனு யாதவ் ஓரளவு ரன்கள் எடுத்த நிலையில் களத்தை விட்டு வெளியேறினார்.

இறுதியில் ராஜகோபால் மற்றும் குருசாமி இணைந்து அணியை வெற்றி இலக்கை எட்ட செய்தனர் முடிவில் நெல்லை அணி 13.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் எடுத்து, 6 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ராஜகோபால் 42* ரன்களும், கார்த்திக் 32 ரன்களும் குவித்துள்ளனர்.