காயத்திற்குப் பிறகு வருகிறீர்கள் என்றால், சர்வதேச போட்டியில் விளையாட வேண்டாம் என்று முன்னாள் வீரர் கம்பீர் காட்டம்.
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையே புனேவில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் என இரண்டும் சொதப்பிய நிலையில் தோல்வியை சந்தித்தது. அதுவும் குறிப்பாக, இந்திய வேகப்பந்து வீச்சாளர் அரஷ்தீப் சிங் ஹாட்-ட்ரிக் நோ-பால் வீசிய நிலையில் மொத்தமாக நேற்றைய போட்டியில் 5 நோ-பால்கள் வீசி பல விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், காயம் ஏற்பட்டு அணிக்கு திரும்பும் வீரர்கள் நேரடியாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடக்கூடாது என இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். காயம் ஏற்பட்டு அணிக்கு திரும்பும் வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, உங்களுடைய சிறந்த ஆட்டத்தை மீட்டெடுக்க வேண்டும், ஏனெனில் நோ-பால்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார்.
மேலும், நேற்றைய போட்டியில் மொத்தம் ஏழு நோ-பால்களை கற்பனை செய்து பாருங்கள், இது 21 ஓவர்களுக்கு மேல் வீசுவது போன்றது என்றும் குறிப்பிட்டார்.