பும்ரா இல்லை ஒழுங்கா விளையாடுங்க! அர்ஷ்தீப் சிங்க்கு அட்வைஸ் கொடுத்த முன்னாள் வீரர்!
அணியில் பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் இல்லை என்பதால் கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தவேண்டும் என அர்ஷ்தீப் சிங்க்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் லாய்டு அட்வைஸ் கொடுத்துள்ளார்.

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட தயாராகி வரும் நிலையில், அணியில் பந்துவீச்சில் தூணாக இருக்கும் பும்ரா விளையாடவில்லை என்பது ரசிகர்களுடைய கவலையாக இருந்து வருகிறது. கவலை ஒரு பக்கம் இருந்தாலும் ஷமி போன்ற முக்கிய பந்துவீச்சாளர் அணியில் இருப்பதால் ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் இருந்து வருகிறது.
இருந்தாலும், பல போட்டிகளில் பும்ராவின் பந்துவீச்சு இந்தியாவிற்கு பலமாக ஆதரவு கொடுத்துள்ளது என்பது சொல்லியே தெரியவேண்டாம். எனவே, அவரை போல ஒரு வீரர் முக்கியமான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவில்லை என்பது அணிக்கு பின்னடைவான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. இதைத்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் எடுத்துப்பேசி வருகிறார்கள்.
அந்த வகையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் லாய்டு தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசும்போது பும்ரா இல்லை என்பதால் இந்திய அணி தடுமாறும் என தெரிவித்ததோடு இந்திய வேக பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்க்கு முக்கிய அட்வைஸும் வழங்கியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” உலகின் சிறந்த பந்து வீச்சாளர் விளையாடவில்லை என்பதைக் கவனிக்காமல் விட முடியாது. அதை நினைக்கவே இல்லையென்றால், உங்களுக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது. அவரைப்போல ஒரு வீரர் இல்லை என்பதால் இந்திய அணி கொஞ்சம் தடுமாறலாம்.
எதிரணி அணிகள் பும்ராவின் இடத்தை அர்ஷ்தீப் சிங் போன்ற பந்துவீச்சாளர்களால் நிரப்ப முயற்சி செய்யலாம், ஆனால் பும்ரா ஏற்படுத்திய அளவுக்கு அவரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. இது ஒரு T20 போட்டி இல்லை, இது ஒரு சின்னப் பார்ட்டி மாதிரி இல்ல. நீங்க திரும்பி வந்து மீண்டும் பந்துவீசணும். எனவே, அதற்கு ஏற்ப பயிற்சி எடுக்கவேண்டும். இந்த மாதிரி போட்டிகள் அர்ஷ்தீப் சிங்கிற்கு மிகப்பெரிய வாய்ப்பு. எனவே, அதனை புரிந்து கொண்டு ஆடவேண்டும்.
பும்ரா இடத்திற்கு அவர் களமிறங்கி விளையாடுகிறார் என்பதால் நானும் அவருடைய ஆட்டத்தை பார்க்க காத்திருக்கிறேன். எப்படி விளையாட போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” எனவும் டேவிட் லாய்டு தெரிவித்துள்ளார்.