MKStalin : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 2 நாள் மாநாடு.! மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்பு.! 

Tamilnadu CM MK Stalin

மாநில சட்ட ஒழுங்கு, மாவட்ட நிர்வாக நடவடிக்கைகள்,  அரசு திட்ட செயல்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு திடீர் விசிட் அடித்து அங்கு மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் உடன் ஆலோசனை மேற்கொள்வது வழக்கம்.

தற்போது அதே போல குறிப்பிட்ட மாவட்டங்களை தேர்வு செய்யாமல் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் மாநாடு நடத்த உள்ளார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. வருகிற அக்டோபர் மாதம் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் 2 நாள் மாநாடாக இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற  03.10.2023 மற்றும் 04.10.2023 என இரு நாட்கள் சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் கலந்துகொள்ளும் மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் தமிழக அமைச்சர்கள், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அலுவலர்கள், வனத்துறை அலுவலர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்வர். இந்த இரண்டு நாள் மாநாட்டில் மாவட்ட நிர்வாகம், சட்டம் ஒழுங்கு நிலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவான ஆய்வினை முதலமைச்சர் மேற்கொள்ள உள்ளார்.

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் விதமாக அரசு பல்வேறு புதிய அறிவிப்புகளையும், திட்டங்களையும் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களை ஆய்வு செய்யவும், அவற்றை மேலும் சிறப்பாக செயல்படுத்துவது குறித்து அறிவுரைகளை வழங்குவதற்கும் இந்த மாநாடு நடைபெற உள்ளது எனஅந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்