CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுவரும் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு 197 ரன்களை இலக்காக ஆர்சிபி நிர்ணயித்துள்ளது.

சென்னை : சேப்பாக்கத்தில் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணியும் மல்லுக்கட்டி வருகின்றது. இரு அணிகளும் முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இன்று களமிறங்குகிய நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்து வீச முடிவு செய்தது.
சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 196 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் சென்னை அணிக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்தது ஆர்சிபி அணி.
ஆர்சிபி அணி சார்பாக, தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிலிப் சால்ட், நிதானமாக விளையாடி 16 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். அவரை எம்.எஸ்.தோனி, அதிரடியாக ஸ்டம்ப் அவுட்டாக்கினார். அடுத்ததாக நிதனமாக விளையாடிய தேவ்தத் படிக்கல் 14 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து அஸ்வின் ஓவரில் ருதுராஜிடம் கேட்ச் கொடுத்துவிட்டு பெவிலியனுக்கு சென்றார்.
விராட் கோலி 30 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து நூர் அகமது பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பின்னர், 16-வது ஓவரில் லிவிங்ஸ்டோனை 10 ரன் எடுத்து வெளியேறினார். அதிகபட்சமாக ரஜத் படிதர் கேப்டனாக தனது முதல் அரைசதத்தை 30 பந்துகளில் அடித்தார். இருப்பினும் அவர் பதிரானா ஓவரில் முதல் பந்திலேயே சாம் கரனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகினார்
அதே நேரம், பதிரானாவின் நான்காவது பந்தில், ஒரு ரன் கூட அடிக்க விடாமல் க்ருனாலை பெவிலியனுக்கு அனுப்பினார். கடைசியில் களமிறங்கிய டிம் டேவிட் அதிரடியாக விளையாடினார். வந்த வேகத்தில் மூன்று சிக்ஸ் அடித்து அசத்தினார். இறுதியில், பெங்களூரு அணி, 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களைப் பெற்றது. அதன்படி சென்னை அணிக்கு 197 ரன்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
சிஎஸ்கே தரப்பில் நூர் முகமது 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும், இன்று அணியில் புதியதாக சேர்க்கப்பட்ட பதிரானா 2 விக்கெட்டுகளை எடுத்து காட்டினார். இப்பொது, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி சென்னை அணி களமிறங்கவுள்ளது.