#IPL2021: திடீரென வைரலாகும் வார்னரின் ஷூ.. அப்படி அதுல என்ன இருக்கு?

Default Image

ஐபிஎல் தொடரில் கடந்த 28-ம் தேதி நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் அணிந்த ஷூ, சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரில் கடந்த 28-ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. டெல்லி நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 61 ரன்களும், டேவிட் வார்னர் 57 ரன்களும் அடித்தனர். அதனைதொடர்ந்து பேட்டிங் செய்த சென்னை அணி, 18.3 ஓவர்களில் 173 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது.

இந்த ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் அணிந்திருந்த ஷூ, தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஷூவில் அவரது மனைவி மற்றும் குழந்தைகளின் பெயர் பதிக்கப்பட்டு இருந்தது. இதனை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வார்னரின் மனைவி பதிவிட்டுள்ளார்.

candy warner story

அந்த பதிவில் அவர், “இந்த உலகில் எங்கிருந்தாலும், நாங்கள் எப்போது உங்களுடனே இருப்போம்” என்று தனது கருத்தை பதிவிட்டுள்ளார். இந்த பதிவு, தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில், தான் ஒரு சிறந்த கணவர் மற்றும் அப்பா என்பதை வார்னர் நிரூபித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்