4-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா சேர்ப்பு – பிசிசிஐ அறிவிப்பு ..!

4-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவை சேர்த்துள்ளார்.

4-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவை சேர்த்துள்ளார்.

இங்கிலாந்து சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 1-1 என்ற கணக்கில் சமமாக உள்ளனர். சற்று முன் பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் தொடக்கத்திலிருந்தே இந்திய அணியுடன் காத்திருப்பு பட்டியலில் உள்ள பிரசித் கிருஷ்ணா பயிற்சி மற்றும் பயணம் செய்து வருகிறார். நாளை 4 டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவலில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், அகில இந்திய மூத்த தேர்வுக் குழு அணி நிர்வாகத்தின் வேண்டுகோளின் அடிப்படையில்  4-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவை சேர்த்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய போட்டியில் பிரசித் கிருஷ்ணா லெவனில் இடம்பெறுவாரா..? என்பது பொருத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

இந்திய அணி வீரர்கள்:

ரோகித் சர்மா, கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது. ஷமி, சிராஜ், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், வித்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), அபிமன்யு ஈஸ்வரன், பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

unknown node