முதல் தர கிரிக்கெட்டில் ப்ரித்வி ஷா, 240* ரன்கள் குவித்து தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளார்.
ரஞ்சி ட்ராபி கிரிக்கெட் தொடரில் மும்பை வீரர் ப்ரித்வி ஷா, அசாமுக்கு எதிரான போட்டியின் முதல் நாளில் 240*(283) ரன்கள் குவித்துள்ளார். 33 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாசி ப்ரித்வி ஷா, தனது அதிகபட்ச ஸ்கோரை அடித்துள்ளார்.
இதற்கு முன்னதாக ப்ரித்வி ஷா, பரோடாவுக்கு எதிரான ரஞ்சி டிராபி தொடரில் 202(179) ரன்களை அடித்ததே அவரின் முந்தைய அதிகபட்ச ஸ்கோராக இருந்தது, அதனை ஷா, இன்று முறியடித்துள்ளார். இன்று முதல் ஆட்டத்தில் ப்ரித்வி ஷா, ஆட்டமிழக்காமல் இன்னும் 240* ரன்களுடன் களத்தில் இருக்கிறார்.