தனது 100-வது டெஸ்ட் போட்டியை முன்னிட்டு பிரதமர் மோடியை சந்தித்த புஜாரா.!

தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள செத்தேஸ்வர் புஜாரா, பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.

தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள செத்தேஸ்வர் புஜாரா, பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரும் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரண்டாவது போட்டி டெல்லியில் வரும் 17ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த போட்டி இந்திய வீரர் செத்தேஸ்வர் புஜாராவுக்கு 100 ஆவது டெஸ்ட் போட்டியாகும். இதனை முன்னிட்டு தனது 100வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக புஜாரா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். இந்த புகைப்படங்களை தனது ட்விட்டரில் புஜாரா பகிர்ந்துள்ளார். அவர் தனது ட்வீட்டில், மாண்புமிகு பிரதமர்  நரேந்திர மோடி யை சந்தித்தது எனக்கு மிகப்பெரும் ஒரு மரியாதை, மேலும் எனது 100-வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அவரை சந்தித்தது எனக்கு பெரும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடியும் இதற்கு பதிலளித்து தனது ட்வீட்டில், புஜாரா உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி, உங்களது 100-வது போட்டிக்கு எனது வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

unknown node