ரமேஷ் பவார் இந்திய மகளிர் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமனம்..!

Default Image

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவாரை பிசிசிஐ நியமித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி இந்திய மகளிர் அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமனத்துக்கு விண்ணப்பங்களை பிசிசிஐ கோரியது. இதற்கு 35 பேர் அதற்காக 35 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தன.

சுலக்ஷனா நாயக், மதன் லால் மற்றும் ருத்ரா பிரதாப் சிங் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழு நேர்காணல் செய்து ரமேஷ் பவாரை இந்திய மகளிர் அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளராக ஒருமனதாக தேர்வு செய்தனர்.

இந்தியாவுக்காக இரண்டு டெஸ்ட் மற்றும் 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பவார், இதற்கு முன்பு ஜூலை 2018 முதல் நவம்பர் 2018 வரை பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார். இந்திய அணி 2018 -ஆம் ஆண்டு ஐ.சி.சி மகளிர் டி 20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்குள் நுழைந்தது.

மேலும், தொடர்ச்சியாக 14 டி20 சர்வதேச போட்டிகளிலும் வென்றது. 2018 -ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி போட்டியின் போது பயிற்சியாளர் ரமேஷ் பவாருக்கும்,  மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் இடையே மோதல் ஏற்பட்டது. போட்டி முடிவடைந்த பிறகு ரமேஷ் பவாரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் விஜய் ஹசாரே டிராபியை வென்ற மும்பை அணியின் பயிற்சியாளராகவும், தேசிய கிரிக்கெட் அகாடமியில் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் பவார் செயல்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்