2-வது டெஸ்ட் போட்டி – சதம் அடித்து அசத்திய ஹிட் மேன் 

Rohit Sharma hits a century at MA Chidambaram Stadium in Chennai

2-வது டெஸ்ட் போட்டியில் ஹிட் மேன்  ரோகித் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்  நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.இதனால் இந்திய அணி தனது பேட்டிங்கை தொடங்கியது தொடக்க வீரர்களாக சுப்மன் கில், ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினர். இதில் சுப்மன் கில், ஒல்லி ஸ்டோன் பந்துவீச்சில் டக் அவுட்டாகி வெளியேறினார்.

பின்னர், இறங்கிய புஜாரா நிதானமாக விளையாடி வந்த நிலையில் 28 ரன்னில் பென் ஸ்டோக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து இறங்கிய இந்திய அணி கேப்டன் கோலி ரன் எடுக்காமல் டக் அவுட் ஆனார். 3 விக்கெட்டுகளை இழந்தாலும் மறுபுறம் அதிரடியாக ஹிட் மேன் ரோகித் சர்மா விளையாடி வந்தார்.47 பந்துகளில் தனது அரை சதத்தை கடந்தார்.தற்போது 130 பந்துகளில் தனது 7 வது சதத்தை பதிவு செய்துள்ளார்.தற்போதைய நிலவரப்படி இந்திய அணி 49 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் அடித்துள்ளது.ரோகித் சர்மா 123  ரன்களுடனும் ,ரஹானே 35 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் லீச் ,அலி ,ஸ்டோன் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.