இந்திய அணியுடன் இணைந்த ரோஹித் சர்மா.. மூன்றாம் டெஸ்டில் கலந்துகொள்ள வாய்ப்பு?

Indian cricketer Rohit Sharma has joins the Indian team in Melbourne after 14 days of isolation and going to play in third test.

இந்திய அணியின் அதிரடி வீரர் ரோஹித் சர்மா 14 நாட்கள் தனிப்படுத்தலுக்கு பிறகு, மெல்போர்னில் இருக்கும் இந்திய அணியோடு இணைந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா, இன்று இந்திய அணியுடன் இணைந்தார்.

ஐபிஎல் தொடரின்போது அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 தொடரில் அவர் கலந்துகொள்ளவில்லை. முழு உடல்தகுதி பெற்றால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் இடம்பெறுவார் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்த நிலையில், டிசம்பர் இரண்டாம் வாரத்தில் தனது உடல்தகுதியை நிரூபித்து, டெஸ்ட் தொடரில் கலந்துகொள்ள கடந்த 16 ஆம் தேதி ஆஸ்திரேலியா சென்றடைந்தார்.

unknown node

அங்கு 14 நாட்கள் தனிப்படுத்தலுக்கு பிறகு, மெல்போர்னில் இருக்கும் இந்திய அணியோடு ரோஹித் சர்மா இணைந்துள்ளார். அவருக்கு இந்திய அணி வீரர்கள் வரவேற்பு தெரிவித்தனர். இதுதொடர்பான விடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. முன்றாம் டெஸ்ட் போட்டி, ஜனவரி 7 ஆம் தேதி சிட்னியில் நடைபெறவுள்ள நிலையில், இந்த போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.