ஹிட்மேன் வாழ்க்கையில் அடுத்த சூப்பர் ஹிட்..!!! அப்பாவான ரோகித் புகைப்படத்துடன் மகிழ்ச்சி..!!

இந்திய அணி ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோகித் சர்மாவுக்கு  பெண் குழந்தை பிறந்துள்ளது.இந்நிலையில் தன் செல்ல மகளின் முதல் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு

இந்திய அணி ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோகித் சர்மாவுக்கு  பெண் குழந்தை பிறந்துள்ளது.இந்நிலையில் தன் செல்ல மகளின் முதல் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு அசத்தியுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரருக்கு மகிழ்ச்சிகரமாக ஆண்டாகவே இருந்தது.ஒரு பக்கம் ஹிட்டான கிரிக்கெட் மறுபக்கம் வாழ்க்கையில் நிஜ ஹீரோவாகியும் உள்ளார்.

கடந்த மாதம் டிசமர் 31 ஆம் தேதி ரோகித்- ரித்திகா தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தைக்கு பிறந்ததுள்ளது.இவர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு ரோகித் தனது நீண்டநாள் காதலியான ரித்திகாவை கரம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த தன் மனைவி ரித்திகாவுக்கு டிசம்பர் 31 ஆம் தேதி மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்ததுள்ளது.

unknown node

இந்நிலையில் தான் தந்தையான அடுத்து நொடியே ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் விளையாடிக் கொண்டிருந்த ரோகித் உடனடியாக மும்பைக்கு மகளை பார்க்க விரைந்தார். தன்னுடய அழகான பெண் குழந்தையை கண்ட ரோகித் அளவற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில் தன் குழந்தை பிறந்து சில நாட்களே ஆனநிலையில், தனது மகளின் முதல் புகைப்படைத்த தன்னுடைய ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ளார்.

unknown node

அதில் இந்த உலகத்திற்கு வணக்கம்  2019 ஆம் ஆண்டு அனைவருக்கும் சிறப்பாக இருக்கும் என பதிவிட்டு தன் செல்ல மகளின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.அந்த புகைப்படத்தில் ரோகித்தின் செல்ல மகளின் பிஞ்சு விரல்கள் தன் சுண்டு விரலைப் பற்றிக்கொள்ளுமாறு உள்ள படத்தை  ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் அது தற்போது வைரலாகி வருகிறது