“பில்லிங்ஸ், நீங்க கிரிக்கெட் ஆட வந்திருக்கீங்க.. வைஃபை யூஸ் பண்ண இல்ல”- வைரலாகும் கமெண்ட்!

வைஃபை சரியாக கிடைக்கவில்லை என சாம் பில்லிங்ஸின் டீவீட்டிற்கு ரசிகர் ஒருவர் நக்கலாக பதிலளித்துள்ளது, சமூகவலைத்தளத்தில் வைரலாகி, மீம் கண்டண்டாக மாறி வருகிறது.
2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கவுள்ளது. முதல் போட்டி மும்பை இந்தியன்ஸ் – தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்த போட்டி, சென்னையில் நடைபெறுகிறது. இதனைதொடர்ந்து இரண்டாம் போட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டி மும்பையில் நடைபெறும் நிலையில், தொடரில் பங்கேற்கும் வீரர்கள் தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், சென்னை – டெல்லி அணியில் வீரர்கள், மும்பையில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரர் சாம் பில்லிங்ஸ், மும்பையில் உள்ள விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
Only one way to decide….
Jio or Airtel WiFi Dongle?
— Sam Billings (@sambillings) March 30, 2021
அவர் தங்கியிருந்த அறையில் வைஃபை சரியாக கிடைக்கவில்லை என தனது ட்விட்டர் பகுதியில் ட்வீட் செய்துள்ளார். அதுமட்டுமின்றி, இந்தியாவில் பயன்படுத்த சிறந்த வைஃபை டாங்கில் எது? என ரசிகர்களிடம் கேட்டுள்ளார். மேலும், ஜியோ அல்லது ஏர்டெல் இவற்றில் எதை பயன்படுத்தலாம்? என ரசிகர்களிடம் கருத்து கேட்டுள்ளார்.
அதனை பார்த்த ரசிகர் ஒருவர், “பில்லிங்ஸ், நீங்க கிரிக்கெட் ஆட வந்திருக்கீங்க.. வைஃபை யூஸ் பண்ண இல்ல” என கமெண்டு செய்துள்ளார். “இந்த மாதிரி பண்ணாதீர்கள். இது ஹோட்டல் மேனேஜ்மேன்ட்டின் தவறாக இருக்கலாம். இப்படி சொன்னால் இந்தியாவின் இமேஜ் என்ன ஆகும்?” என நக்கலாக பதிலளித்துள்ளார். தற்பொழுது அந்த கமெண்டு வைரலாகி, மீம் கண்டண்டாக மாறி வருகிறது.
Dear billings u r here to play cricket buddy , not to use wifi…n plz don’t do these things ,it whould be just Hotal mngmt’s fault..What it’s good for india’s image? #JustSaying
— Sonu Mahi (@Imstrongmahi025) March 31, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025