ஐபிஎல் தொடரின் இன்றைய RCB-KKR போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடி 204 ரன்கள் குவிப்பு.
16-வது ஐபிஎல் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் அதிரடியாக விளையாடி அரைசதம்(57 ரன்கள்) அடித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரசல்(0) மற்றும் கேப்டன் நிதிஷ் ராணா(1) ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதன்பின் களமிறங்கிய ஷர்துல் தாக்குர்(68 ரன்கள்) மற்றும் ரிங்கு சிங்(46 ரன்கள்) இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி கொல்கத்தா அணியின் ஸ்கோரை உயர்த்தினர். முடிவில் கொல்கத்தா அணி 20 ஒவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்துள்ளது. பெங்களூரு அணி சார்பில் டேவிட் வில்லி 2 விக்கெட்களும், கரண் சர்மா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.