இது கோழை தாக்குதல்..! ஷேவாக் கடும் காட்டத்துடன் ட்விட்..!

ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40 க்கும் மேற்பட்ட வீரர்கள்

ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40 க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.இதில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.இந்த கொடூர தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு ஆனது  பொறுப்பேற்றுள்ளது.இந்நிலையில் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு நாடே கண்டனத்தையும்,எதிர்ப்புகளையும் தெரிவித்து வரும் நிலையில் அதிரடி மன்னன் வீரேந்திர சேவாக் இந்த கொடூர தக்குதல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த கோழைத்தனமான தாக்குதல் பெரும் வலியை ஏற்படுத்தியது. நமது வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இந்த வலியை விவரிக்க வார்த்தைகள் இல்லை மேலும் இதில் காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

unknown node