மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களின் முடிவில் வெறும் 136 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது
மும்பை மற்றும் ஹைதரபாத் அணிகளுக்கிடையேயான போட்டி தற்போது ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது .இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி தெளிவாக பந்து வீச தீர்மானித்தது .இதன்படி களமிறங்கிய மும்பை துவக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் குவிண்டன் டீ காக் ஆகியோர் கடுமையாக சொதப்பினர்.
ரோஹித் 11 ரன்களிலும் குவிண்டன் டீ காக் 19 ரன்களிலும் வெளியேறினர். அதன் பின்னர் வந்த வீரர்கள் யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. இறுதியாக பொல்லார்ட் 26 பந்துகளில் 46 ரன்கள் அடிக்க மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது.