#SRHvCSK: ஹைதராபாத்தை 134 ரன்களில் சுருட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ்!

Sunrisers Hyderabad scored 134 in the match against Chennai at the Sharjah ground.

ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வரும் சென்னைக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 134 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 44-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணிகளும் விளையாடி வருகின்றனர். ஐக்கிய அரபு அமீரகம், ஷார்ஜா ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களான ஜேசன் ராய், விருத்திமான் சாஹா நல்ல தொடக்கம் கொடுத்த நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜேசன் ராய் 2 ரன்களில் ஆட்டமிழக்க, இவரைதொர்ந்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் வெறும் 11 ரன்கள் மட்டுமே அடித்து விக்கெட்டை இழந்தார்.

நிதானமாக விளையாடி வந்த விருத்திமான் சாஹா 44 ரன்களில், ஜடேஜா பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனைத்தொடர்ந்து வந்த அபிஷேக் சர்மா, அப்துல் சமத் தலா 18 ரன்களில் அவுட்டானார்கள். இதன்பின் ஹைதராபாத் அணி வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டை இழக்க, இறுதியில் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்துள்ளது.

இதனால் சென்னை அணி 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ளது. இப்போட்டியில் சென்னை வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் முதலிடத்தை தக்க வைக்கும் மற்றும் தகுதி சுற்றை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை அணியில் சிறப்பாக பந்து வீசிய ஜோஷ் ஹேசில்வுட் 3, டுவைன் பிராவோ 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.