#SRHvsPBKS: பஞ்சாப்பை நொறுக்கித் தள்ளிய ஹைதராபாத்...126 ரன்கள் அடித்தால் வெற்றி!

Punjab, who batted first in the match at Sharjah, scored 125 runs.

ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 125 ரன்கள் எடுத்துள்ளது.

இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 37வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் கே.எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் தடுமாற்றத்தை கண்டு தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இவர்களை தொடர்ந்து வந்த கிறிஸ் கெய்லும் நினைத்தபடி விளையாடவில்லை. 14 ரன்களிலேயே வெளியேறினார்.

அதேபோல் ஐடன் மார்க்ரம் 32 பந்துகளில் 27 ரன்கள் அடித்து அவுட்டானார். இதுவே அதிகபட்ச தனிநபர் ரன்னாகும். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பூரான் மற்றும் தீபக் ஹூடா வழக்கம்போல் ஒரு சில ரன்கள் மட்டுமே அடித்து விக்கெட்டை இழந்தனர்.

ஹைதராபாத் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், பஞ்சாப் அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து, இறுதியாக 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 126 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறங்கியுள்ளது. ஹைதராபாத் அணியில் சிறப்பாக பந்துவீசிய ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.