இந்தியாவை வீழ்த்தி டி 20 தொடரை வென்றதற்காக இலங்கை அணிக்கு பரிசுத்தொகை அறிவித்த கிரிக்கெட் வாரியம் ..!

Sri Lanka Cricket Board has announced a reward of US $ 100,000 for the Sri Lankan national team for beating India in the T20 series.

இந்தியாவை வீழ்த்தி டி 20 தொடரை வென்றதற்காக இலங்கை தேசிய அணிக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் பரிசுத்தொகையாக 1,00,000 அமெரிக்க டாலர்களை வழங்குவதாக அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்திய அணி 2 -1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இதைத்தொடர்ந்து,நடைபெற்ற  முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனையடுத்து,நடைபெற்ற இரண்டு டி-20 போட்டிகளிலும் இந்தியாவை வீழ்த்தியது,இறுதியில் 3 போட்டிகள் கொண்ட தொடரை  2 -1 என்ற கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில்,இந்தியாவுக்கு எதிரான வரையறுக்கப்பட்ட ஓவர் தொடரை வென்றதால் இலங்கை கிரிக்கெட் வாரியம் ,தேசிய அணிக்கு பெரும் பரிசுத் தொகையை உறுதியளித்தது.ஏனெனில்,அக்டோபர் 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் டி 20 தொடரை தற்போது இலங்கை வென்றுள்ளது.வீரர்களின் இத்தகைய  சாதனைகளால் ஈர்க்கப்பட்ட கிரிக்கெட் வாரியம் 1,00,000 அமெரிக்க டாலர் பரிசுத் தொகையை வழங்குவதாக அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும்,எஸ்எல்சி ஒரு அறிக்கையில் கூறியதாவது:”இந்தியாவுக்கு எதிரான டி 20 தொடரின் போது மைதானத்தில் சிறந்து விளங்கியதற்காக தேசிய கிரிக்கெட் அணிக்கு இலங்கை கிரிக்கெட் அணி வாழ்த்து தெரிவிக்கிறது. குறிப்பாக,இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகக் குழு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்களின் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்.இந்த வெற்றி மிகவும் அவசியமாது, எனவே,வெற்றியை அங்கீகரிப்பதற்காக, இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு தேசிய அணிக்கு 1,00,000 அமெரிக்க டாலர்களை வழங்க முடிவு செய்துள்ளது,என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.