இன்றைய போட்டியில் இலங்கை Vs வெஸ்ட் இண்டீஸ் அணி மோதி வருகிறது .இப்போட்டிசெஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்ரில் உள்ளரிவர்சைடு மைதானத்தில்நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் இலங்கை அணியில் தொடக்க வீரர்களாக திமுத் கருணாரத்ன , குசல் பெரேரா இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து நிதானமாக விளையாடிய இருவரும் ரன்களை சேர்த்தனர்.
unknown nodeநிதானமாக விளையாடி வந்த திமுத் கருணாரத்ன 15 -வது ஓவரில் 32 ரன்களுடன் வெளியேறினர்.பின்னர் அவிஷ்கா களமிறங்கினர்.சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த குசல் பெரேரா அரை சதத்தை நிறைவு செய்து 51 பந்தில் 64 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
அதன் பின்னர் அடுத்தடுத்து களமிறங்கிய அதிரடியாக விளையாடி குசால் மெண்டிஸ் 39 , ஏஞ்சலோ மேத்யூஸ் 26 ரன்களுடன் வெளியேறினர். நிதானமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தஅவிஷ்கா 103 பந்தில் 104 ரன்கள்குவித்தார்.
unknown nodeஇறுதியாக இலங்கை அணி50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 338 ரன்கள்குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சில் கேப்டன்ஜேசன் ஹோல்டர் இரண்டு விக்கெட்டைபறித்தார் . 339 ரன்கள் இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்க உள்ளது.